Sunday, April 3, 2011

பாரதியின் கவிதை-மூன்றாவது பரிசு

 சமீபத்தில இந்த பாட்டை எந்த சூழ்நிலையில பாரதி எழுதினாரு படித்தபோது ஆச்சரியமாக  இருந்தது.. நாம் சற்றும் யூகிக்க முடியாத கவிதை பின்னணி.

"ஒரு பாட்டுக்கு ஒரு கதை" என்னும் தலைப்பில் என்.ராமகிருஷ்ணன் அவர்கள் புத்தகதில் இருந்து,...
சென்னையில் இருந்த ஒரு சமூகத்தினர், நம் நாட்டை குறித்து சிறந்த கவிதை எழுதுபவருக்கு பரிசு தரப் போவதாக அறிவித்தனர். பரிசு தொகை
முதல் பரிசு-முந்நூறு ரூபாய்
இரண்டவது-இரண்டு நூறு
மூன்றாவது-நூறு
இவ்வாறு அறிவித்து இருந்தனர்.

யார் வேண்டுமானாலும் கவிதை அனுப்பலாம்.பாரதியின் நண்பர்கள் அவரை ஒரு கவிதை அனுப்புமாறு கேட்டனர்.. அவரும் அனுப்பினர்..
சிறிது காலம் கழித்து அவருடைய கவிதைக்கு மூன்றாவது பரிசு என்று அறிவிக்கப்பட்டது. இது பாரதி மற்றும் அவரது நண்பர்களுக்கு வருத்தத்தை அளித்தது.. முதல் இரண்டு பரிசு யாருக்கோ தர வேண்டும் என்று போட்டியை நடத்தியவர்கள் முடிவு செய்து விட்டனர் என்று பாரதி வருத்ததுடன் கூறினர்.

முதல் இரண்டு கவிதை என்னவாயிற்று யாருக்கும் தெரியாது.. ஆனால் மூன்றாவது பரிசு பெற்ற கவிதை மிக புகழ் பெற்ற கவிதையாக இன்றும் விளங்கி வருகிறது.


 "செந்தமிழ் நாடெனும் போதினிலே"- இந்த பாடல் இல்லாத தமிழ் போட்டிகள் இருந்ததாக ஞாபகம் இல்ல.  பாரதி எழுதிய கவிதையும் இதுவே..

தாலியும் மஞ்சளும்-எவ்வளவு பழமை

பண்டை தமிழனை பற்றி நமக்கு எவ்ளோ தெரியும்??? நாம் எவ்வளவு அவர்களிடம் இருந்து வேறுபடுகிறோம்???? எதில் வேறுபாடு??

நான் படித்து கொண்டிற்கும் "பண்பாட்டு அசைவுகள்" என்னும் புத்தகத்தில் தொ.பரமசிவன் அவர்கள் எழுதியதில் சில ஆச்சர்யங்கள் இருந்தது...அதில் சில பகுதிகள் இந்த பதிவில் இருந்து....

முதலில் மங்களகரமான தலைப்பில் இருந்து ஆரம்பிக்கிறேன்... "தாலியும் மஞ்சளும்"
 
நமக்கு கிடைக்கும் தொல்காப்பியச் சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பாதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது. 
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1957யில் ஒரு பெரிய விவாதமே நடந்ததாகவும் அதை தொடங்கி வைத்தவர் கண்ணதாசன் என்றும் குறிப்பிடுகிறார். அதில் ம.போ.சி மட்டுமே தாலி தமிழரின் தொல் அடையாளம் என்று வாதிட்டு இருக்கிறார்.

கி.பி.10ஆம் நுற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி பேச்சே கிடையாதாம்!!!! 

தொல்பழங்குடி மக்கள் பிள்ளைகளைத்  தீயவை அணுகாமல் காப்பதற்கு இடுப்பில் அரைஞான் கயிற்றில் சில பொருள்களைக் கோர்த்து கட்டும் வழக்கம் இருந்தது.  ஐந்து பொருட்களை சேர்த்து கட்டுவதனால் சங்க இலக்கியங்கள், 'ஐம்படைத் தாலி' என்று குறிப்பிடுகிறது.  மிக அண்மைக்காலம் வரைக் கூட கிராமப்புறங்களில்  அரைஞான் கயிற்றில் நாய்,சாவி,தாயத்து,காசு,அரசிலை உருவங்களை செய்து கட்டுவது வழக்கமாக இருந்துள்ளது.
எனவே தாலி என்னும் சொல் கழுத்துத் தாலியை தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவு. கி.பி.7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்!!!

மாறாக, வீரத்தின் சின்னமாக தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து ஆண் தன் கழுத்தில் கோர்த்து கொண்டதை 'புலிப்பல் தாலி' என்று குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிச்சனல்லூர் உட்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருளிலும் தாலி இல்லை.
இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி,பெருதாளி,பஞ்சாரத்தாலி, மண்டைதாலி, நாணல் தாலி,பார்ப்பாரத் தாலி,பொட்டுத் தாலி முக்கியமானவை..
கி.பி.10ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத் தாலி புனிதப் பொருளாக கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம். அதன் பின்னரே கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்கு தாலி அணிவிக்கப்பட்டது. 
மதுரை பக்கத்தில் மணமகன் இல்லாமல் அவனின் சகோதரியை வைத்துக் கூட திருமணம் நடந்து இருக்கிறது ...

தாலி மட்டும் இல்ல... இன்று திருமணத்தில் முக்கியமான மஞ்சள் குங்குமம் கூட பெண்ணுக்குரிய மங்கள பொருட்களாக பெசப்படலை.. 
ஆரோக்கிய பொருளாகவே இவை கருதப் பட்டுள்ளது..
கிருமி எதிர்ப்பு சக்தி இதில் உள்ளதால் குழந்தைக்குத் தேய்த்து குளிப்பாட்டும் பொருட்டு பயன்படுத்தி உள்ளனர். 
விரலி என்றால் முகபாவனை மாற்றி நடிக்கிற பெண்ணைக் குறிக்கும். அன்று குத்தாடிய பெண்கள் விளக்கு ஒளியில் முகம் துணிபாக தெரிய பயன்படுத்தி உள்ளனர். 


விறலியை மதியாத நம் சமுகம் விரலி மஞ்சளை மட்டும் இன்றும் கொண்டாடுகிறது..

இந்த பதிவை பற்றிய கருத்துகள் வரவேற்கப் படுகிறது...