சமீபத்தில இந்த பாட்டை எந்த சூழ்நிலையில பாரதி எழுதினாரு படித்தபோது ஆச்சரியமாக இருந்தது.. நாம் சற்றும் யூகிக்க முடியாத கவிதை பின்னணி.
"ஒரு பாட்டுக்கு ஒரு கதை" என்னும் தலைப்பில் என்.ராமகிருஷ்ணன் அவர்கள் புத்தகதில் இருந்து,...
சென்னையில் இருந்த ஒரு சமூகத்தினர், நம் நாட்டை குறித்து சிறந்த கவிதை எழுதுபவருக்கு பரிசு தரப் போவதாக அறிவித்தனர். பரிசு தொகை
முதல் பரிசு-முந்நூறு ரூபாய்
இரண்டவது-இரண்டு நூறு
மூன்றாவது-நூறு
இவ்வாறு அறிவித்து இருந்தனர்.
யார் வேண்டுமானாலும் கவிதை அனுப்பலாம்.பாரதியின் நண்பர்கள் அவரை ஒரு கவிதை அனுப்புமாறு கேட்டனர்.. அவரும் அனுப்பினர்..
சிறிது காலம் கழித்து அவருடைய கவிதைக்கு மூன்றாவது பரிசு என்று அறிவிக்கப்பட்டது. இது பாரதி மற்றும் அவரது நண்பர்களுக்கு வருத்தத்தை அளித்தது.. முதல் இரண்டு பரிசு யாருக்கோ தர வேண்டும் என்று போட்டியை நடத்தியவர்கள் முடிவு செய்து விட்டனர் என்று பாரதி வருத்ததுடன் கூறினர்.
முதல் இரண்டு கவிதை என்னவாயிற்று யாருக்கும் தெரியாது.. ஆனால் மூன்றாவது பரிசு பெற்ற கவிதை மிக புகழ் பெற்ற கவிதையாக இன்றும் விளங்கி வருகிறது.
"செந்தமிழ் நாடெனும் போதினிலே"- இந்த பாடல் இல்லாத தமிழ் போட்டிகள் இருந்ததாக ஞாபகம் இல்ல. பாரதி எழுதிய கவிதையும் இதுவே..