Friday, September 17, 2010

சமீபத்தில் நான் ரசித்த பாடல்



இப்பொழுது எல்லாம் தமிழ் சினிமா பாடல்களை கேட்கையில் மெய் சிலிர்க்கிறது ...
தமிழ் தமிழாக இருக்கிறது. இயல்பான,அழகான, முழுமையான சொற்கள். கவித்துவமான வரிகள்...
நா.முத்துக்குமார்,தாமரை இவர்களின் எழுத்துகள் இதில் பெரிதும் பாராட்டுதற்கு உரியது. சில ஆண்டுகளாக நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்கள் இவர்கள் எழுத்துகளாக இருக்கிறது. இன்னொருவர் இருகின்றார்...
அந்த கவிக்கு எவ்வளவு தான் வயது என்று தெரியவில்ல. இத்தனை வயதிலும் இளமையான எழுத்து. சொல்லிக்கொண்டு இருபது வாலி என்ற இளைஞனை பற்றி தான்...
கரிசல் காடுகளை பற்றி எழுதியவர் மட்டும் என்ன சும்மாவா, இன்றைய ந்திரன் வரை அவர் எழுத்துகளிலும் ஒரு நேர்த்தி இருக்கும்....

சினிமா பாடல்களுக்கு இணையாக இப்போதெல்லாம் நம் சின்னத்திரை தொடர்களுக்கு வரும் பாடல்களும் நம் கவனத்தை ஈர்கின்றன. தொடர்களை பார்க்கும் எண்ணம் இல்லைனாலும் இந்த பாடல்களே 30 நிமிடம் முழுதும் பார்க்க வைத்துவிடும் போல...
சமீபத்தில் நான் பார்த்து ரசித்த ஒரு தொலைகாட்சி தொடரின் முகப்பு பாடலே நான் இந்த பதிவை எழுதும் காரணம்....
அந்த பாடல் வரிகளும், அதற்கு சின்மயியின் குரலும், அதை படமாக்கிய விதமும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது....
ஒரு தாய் தன் மகளை எண்ணி பாடுவது போல வரிகள்...எழுதி இருபது யுகபாரதி....
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.

"வேதங்கள் நான்கு இல்லை, ஐந்து என்று உன்னை கொண்டேன்"
"தேவைகள் ஏதும் இல்லை... நீயே என் தெய்வமாக "
கண் விழிக்க காலை எதற்கு ? கிடைத்தாய் நீயும் கிழக்காய்...."
நீல வானம் தேவை இல்லை உந்தன் கண்கள் போதுமே..." அதிலும் இந்த வரிகளை கேட்கும் போதும் நான் மிகவும் ரசித்த பாரதியின் பாடலையே நினைவு படுத்தி விட்டது..

சுட்டும்விழிச் சுடர்தான்,- கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி,- கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நக்ஷத்தி ரங்களடீ!

சோலைமல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக்கட லலையே - உனது
நெஞ்சி லலைகளடீ!
கோலக்குயி லோசை - உனது
குரலி னிமையடீ!
வாலைக் குமரியடீ,- கண்ணம்மா!
மருவக் காதல்கொண்டேன்.

சாத்திரம்பேசுகிறாய்,- கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ
ஆத்திரங் கொண்டவர்க்கே,- கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ?
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்புசெய்வோம்;
காத்திருப் பேனோடீ?- இது பார்,
கன்னத்து முத்தமொன்று!

எத்தனை கவிகள் வந்தாலும் பாரதிக்கு நிகர் பாரதியே.... கற்பனையிலும் சரி.... அழகு தமிழ் வார்த்தைகளை கையாள்வதிலும் சரி...