"யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்."
இதை சொன்ன கவிக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்று எண்ணியது உண்டா?
மொழி மனிதனை பண்பட வைக்கும்..பண்பாட்டை செழிக்க வைக்கும்...(7ஆம் வகுப்பில் படித்த தமிழ் புத்தகத்தில் சொல்லி இருப்பது போல). புதிதாக ஒரு மொழியை கற்கும் போது அறிவு விரிவடையும் என்பது என் கருத்து...
யாம் அறிந்த மொழி என்று பெருமையுடன் எழுதிய கவிஞனுக்கு ஷெல்லிதாசன் என்ற பெயரும் உண்டு !!!
ஒரு குடும்பத்திற்கு ஒருவர் என (army la செர்ந்தோமோ இல்லையோ ) படிப்பு,வேலை என்று பல காரணத்திற்காக மாநிலம் கடந்து,கண்டம் தாண்டி, உலக மயமாக்கல், தொழிற்கல்வி முன்னேற்றம் என்று நாளொரு வளர்ச்சி நோக்கி செல்லும் நேரத்தில் நம் தேசிய மொழியே நமக்கு தெரியாமல் இருப்பது ஆச்சர்யம் தான்.
தமிழ் செம்மொழி தான் ஆனால் ஹிந்தி நம் தேசிய மொழி என்றாகி விட்டது. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் தமிழ் மொழி தவிர மற்ற இந்திய மொழிகளை நம் பாடத் திட்டத்தில் சேர்க்காமல் இருப்பது? மன்னிக்கவும் சேர்க்க மாட்டேன் என்று அடம் பிடிப்பது.
சரி இவர்கள் வழிக்கே வருவோம். செம்மொழியை தவிர வேறு மொழிக்கு பாட திட்டத்தில் இடம் இல்லை என்று மொழி வளர்க்கும் அரசு, தமிழ் ஆசிரியரின் சம்பளத்தை உயர்த்துவதாகவும் தெரியவில்லை... தமிழ் அறிஞர்களை ஊக்குவிப்பதாகவும் தெரியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பாடம் எடுத்து படிப்பவர்கள் விட கணினி படிப்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள் என்று பலர் சொல்லி கேட்டு இருக்கிறேன்... இதற்கு காரணம் தமிழ் மேல் பற்று இல்லை என்றோ கணினி மேல் புது மோகம் என்றோ சொல்லிவிட முடியாது..
ஒரு s/w பொறியாளனின் சம்பளம் மட்டுமே காரணம்....
குடும்பத்தில் முதல் பட்டதாரி ஒருவனை நம்பி அவன் குடும்பம் இருக்கும் நிலையில் அவன் தமிழில் பட்ட படிப்பு முடித்து மொழி வளர்க்க எண்ணுவானா அல்லது 2 வருடத்தில் தன் குடும்பத்தை வறுமை கோட்டில் இருந்து மீட்பானா??
இன்றைய நிலைமையில் தமிழ் படிக்கும் ஆர்வம் இருந்தால் மனதில் உறுதியுடன் செயல்பட வேண்டும். மொழிக்காக வாழ்ந்தவர்களை உயிர் உள்ளவரை அரசும் கண்டு கொள்ளாது. விவேக் ஒரு படத்தில் சொல்வது போல். தமிழ் ஆசிரியராகவே 3 காலத்தையும் கழிக்க வேண்டி இருக்கும்..அன்றைய பாரதி முதல் இன்றைய தமிழ் எழுத்தாளன் வரை(திரை துறையை சேர்ந்தவர்கள் மட்டும் விதிவிலக்கு)ஓவிய கலைஞனையும் இந்த list la சேர்த்து கொள்ளலாம்.
தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து படிப்பதோடு தேசிய மொழியையும் கற்போம் ஆங்கிலம் கற்பது போலவே.....
செம்மொழியோ தாய்மொழியோ தமிழ் படித்தவனுக்கு லட்சங்களில் சம்பளம் வேண்டாம்.. தான் எழுதியதை ஏலம் போட்டு விற்காமல் தவிப்பவனை வறுமையில் இருந்து மீட்டால் நல்லது..
நான் அடிக்கடி பெருமிதம் கொள்ளும் தமிழ் மொழியை பற்றியும் என் தமிழ் ஆசிரியை பற்றியும் எழுத நினைத்தேன்.
கடைசியில் இந்த இரண்டு வருடத்தில் பெங்களுருவில் தமிழச்சி என்று அறிமுகம் ஆகும் போது பலர் என்னிடம் கேட்கும் கேள்வி நினைவுக்கு வந்துவிட்டது..